உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 18, 2011

கடலூர் மாவட்டச் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் பெண்கள் பள்ளிகளுக்கு 17 நேப்கின் இயந்திரங்கள்

கடலூர்:

              கடலூர் மாவட்டச் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், பள்ளி மாணவிகள் பயன்படுத்தும் சானிட்டரி நேப்கின் வழங்கும் 17 தானியங்கி இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை பெண்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. 

                 கனடியன் செஞ்சிலுவைச் சங்க உதவியுடன், நாளைய தலைவர்கள் என்ற திட்டத்தில், கடலூர் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் இந்த இயந்திரங்களை பள்ளி மாணவிகளுக்கு வழங்கியது. 

மஞ்சக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, 
கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,
பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, 
சாமியார் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, 
பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 

             ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.  திட்டத் தொடக்க விழா, கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கடலூர் மாவட்ட செஞ்சிலுவைச் சங்க கௌரவச் செயலாளர் ஆர்.எம்.பாசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி கலந்துகொண்டு, நாப்கின் இயந்திரங்களை பள்ளிகளுக்கு வழங்கி உரையாற்றினார்.  இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொறுப்பாளர் ஜி. கோவிந்தராஜன், வாழ்த்திப் பேசினார். பள்ளித் தலைமை ஆசிரியர் முருகன் நன்றி கூறினார். பள்ளி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர்கள் மால்மருகன், சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior