உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 18, 2011

தமிழகத்தில் '4ஜி' சேவை வசதி

                 

                 ""தமிழகத்தில், பி.எஸ்.என்.எல்., சார்பில், "4 ஜி' (ஒய்-மக்ஸ்) கம்பியில்லா அகண்ட அலைவரிசை மூலம், "பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என, தமிழக வட்ட பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் தெரிவித்தார். 

                  பி.எஸ்.என்.எல்., மூலம் "2ஜி', "3ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக, "4ஜி' கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சேலம், காரிப்பட்டி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் 4ஜி அகண்ட அலைவரிசை பிராட்பேண்ட் சேவையை, தமிழக வட்ட பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முகமது அஷ்ரப்கான் துவக்கி வைத்தார். 

அஷ்ரப்கான் கூறியது: 

            தமிழகம் முழுவதும், 201 இடங்களில், "4ஜி' தொழில்நுட்பத்திலான அகண்ட அலைவரிசை, "பிராட்பேண்ட்' சேவையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 22 இடங்களில், "4ஜி' சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது, 113 இடங்களில், "4ஜி' சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த "4ஜி' அகண்ட அலைவரிசை சேவையை, 15 கி.மீ., தொலைவுக்குள் பெற முடியும். 

             "4ஜி' சேவை தங்குதடையின்றி வாடிக்கையாளர் பெறுவதற்கு ஏற்ப, மூன்று வகையான, "ஆன்டனா'க்கள் பொருத்தப்படுகின்றன. இவ்வாறு அஷ்ரப்கான் கூறினார். "தமிழகத்தில், 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச "லேப்-டாப்' வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாணவ, மாணவியருக்கு "பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்திக் கொடுக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் ஜெகதீசன் கூறினார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior