கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் இவ்வாண்டு, ஆதிதிராவிட மாணவ மாணவியர் 540 பேருக்கு ரூ. 53.50 லட்சத்தில், பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 55 மாணவ மாணவியருக்கு பஅககவ கணினி பயிற்சி, தனியார் நிறுவனம் மூலம் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி 4 மாதங்கள் நடைபெறும். இப்பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ. 400 ஊக்கத் தொகை வழங்கப் படுகிறது. இப்பயிற்சிக்காக அரசு, மாணவர்களுக்குத் தலா ரூ. 2,090 செலவு செய்கிறது. பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி குத்து விளக்கேற்றி, பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் பேசுகையில்,
கணினி பயிற்சி அளிக்க 55 மாணவர்களுக்கு அரசு ரூ. 2,47,500 செலவிடுகிறது. இதுதவிர இவ்வாண்டு ஆதிதிராவிட மாணவ மாணவியர் 540 பேருக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் ரூ. 53.50 லட்சம் செலவில் வழங்கப்பட்டு வருகிறது, எனவே இத்தகைய பயிற்திகளைப் பெறும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் ஒவ்வொருவரும் திறம்பட பயிற்சி பெற்று, தாங்கள் மேலும் பலருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கிறமை பெற்று சுயதொழில்களைத் தொடங்க முன்வர வேண்டும். அவ்வாறு தொழில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு தாட்கோ திட்டத்தில் வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் எஸ். ரங்கநாதன் வரவேற்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக