தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியரின், "குரூப்' விவரங்களை, அரசு தேர்வுத்துறை கணக்கெடுத்து வருகிறது.
வரும் மார்ச்சில் நடைபெறும் பொதுத்தேர்வில், "குரூப்' வாரியாக தேவையான அளவிற்கு கேள்வித்தாள்களை அச்சடிப்பதற்கு வசதியாக, இந்த புள்ளிவிவரம் சேகரிக்கப்படுகிறது. தனித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சேர்க்கைப் பணிகள் முடிந்ததும், அடுத்த மாதம் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் எடுக்கப்படும். தேர்வெழுதுவோர் பட்டியலை தயாரிப்பதற்காக, இந்த புள்ளிவிவரங்கள் எடுக்கப்படும். இந்த பட்டியல், டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு, பொதுத்தேர்வு எழுதுவோர் பட்டியல் இறுதி செய்யப்படும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி: சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2, 3, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கு, பயிற்சிகள் அளிக்கப்படும். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை, மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து, இந்த பயிற்சியை அளிக்க உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக