சிதம்பரம்:
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் நடத்தப்படும் பல்வகையான மேலாண்மைத் துறை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறுமாறு மாணவர்களுக்கு துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. தொலைதூரக்கல்வி முறையில் பல்வேறு படிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக திகழும் இப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மேலாண்மைத் துறை சார்ந்த படிப்புகளில் நவீன காலத்திற்கேற்ப, கற்கும் மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய இளநிலை, முதுநிலை மற்றும் பட்டய நிலைகளில் பல்வேறு படிப்புகளை பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியது.
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பயின்றவர்கள் மட்டுமல்லாது, இன்றைய சூழ்நிலையில் மருத்துவம் பயின்றவர்களுக்கும் மேலாண்மைத் துறை சார்ந்த படிப்பு மிக அவசியமானதாகும். உலகளவிலான வணிக நிறுவனங்களின் வளர்ச்சி அதன் கிளைகளை இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் துவக்கி விரிவு படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் உலகின் இரண்டாவது அதிக மக்கள் சக்தி கொண்ட நாடான நம் இந்தியாவின் இளைய தலைமுறையினர் மேலாண்துறை சார்ந்த படிப்புகளை கற்பதன் மூலம், அவர் தம் இளம் வயதிலேயே பொருளாதார வளம் பெற்று நம் நாட்டின் தனிநபர் வருமான விகிதத்தை உயர்த்த முன்வர வேண்டும்.
நாட்டின் மிக உயர்ந்த மேலாண்மை படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு இணையான பி.பி.ஏ., எம்.பி.ஏ.வில் நிதி, நிர்வாகம், சந்தையியல், மனிதவள நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம், லாஜிஸ்டிக்ஸ் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை இப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் வழங்கி வருகிறது. மேற்கண்ட படிப்புகளில் சேர்ந்து வாழ்வில் வளம் பெற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அழைக்கிறது. படிப்புகள் பற்றிய முழு விவரங்கள், இந்தியா முழுவதும் உள்ள படிப்பு மையங்கள், தகவல் மையங்கள் முகவரி, தொலைபேசி எண்கள் குறித்து பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள்:
04144-238610, 238043, 238044, 238045, 238046, 238047.
இணையதளம்:
முகவரி:
இயக்குநர்,
தொலைதூரக்கல்வி இயக்ககம்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர்-608002.
கடலூர் மாவட்டம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக