உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி!

நெய்வேலி:

             நெய்வேலியில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கிண்டல் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்திச் சென்று மடக்கினார் கல்லூரி மாணவி. சிக்கிய ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். 

                 மற்ற இருவரை போலீசார்  செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். நெய்வேலி வட்டம் 16-யை சேர்ந்த தேவராசு மகளை தேவிரத்னா (22). இவர் செவ்வாய்க்கிழமை மாலை, கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேலுடையான்பட்டு கோயில் அருகே, பைக்கில் வந்த 3 இளைஞர்கள் கிண்டல் செய்து தேவிரத்னாவிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தேவிரத்னா அவர்களை திட்டியதாகத் தெரிகிறது. மேலும்,அவர் கூச்சலிட்டுள்ளார்.

            இதனால் 3 பேரும், பைக்கில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தேவிரத்னா, அவ்வழியே வந்த மற்றொருவரிடம், பைக்கை இரவல் வாங்கிக்கொண்டு, அவர்களை பின்தொடர்ந்து சென்று தென்குத்து கிராமத்தில் மடக்கி பிடித்துள்ளார். அப்போது அந்த 3 பேரும் தேவிரத்னாவை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்தவர்கள், தேவிரத்னாவுக்கு உதவிபுரிய, பைக்கில் வந்தவர்களில் இருவர் தப்பியோடினர். ஒருவர் மட்டும் சிக்கிக் கொண்டார். சிக்கிய நபர் தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்று தெரிந்ததும் அவரை நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

            தேவிரத்னா கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸôர் வழக்குப் பதிவுசெய்து, மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் எஞ்சிய அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன், சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior