உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 11, 2011

கடலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: நவம்பர் 13 ல் ராமதாஸ் கடலூருக்கு வருகை

கடலூர்:
            கடலூர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். செயலாளர்கள் வேணுபுவனேஸ்வரன், சின்னதுரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழ. தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

            இதில் துணைச் செயலாளர் ரவிச்ச்நதிரன், முன்னாள் செயலாளர் வைத்தியலிங்கம், கவுன்சிலர் போஸ் ராமச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட தலைவர் ஆடியபாதம், துணை தலைவர் திருமூர்த்தி, என்.எல்.சி. தொழிற்சங்கம் திலகர், நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, செல்வம், கோவிந்தராஜ், கவுன்சிலர் சரவணன், ஒன்றிய குழு துணைத்தலைவர் வெங்கடேசன், அமைப்பு செயலாளர் சங்கர், அரங்கநாதன், வேல்முருகன், செல்வகுமார், பேச்சாளர் சாமிக்கச்சிராயர், 22-வது வார்டு செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் :

                வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தரும் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே. மணி, மாநில வன்னியர் சங்க தலைவர் குரு, ஆகியோருக்கு கடலூர் அருகே உள்ள கங்கணாங்குப்பத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது அதில் பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்வது.

              கடலூர் நகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தால் பிரதான சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகி விபத்து நடக்கும் நிலை உள்ளது. இந்த நிலைமை மாற்ற மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

           இதே நிலை நீடித்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் போபாலில் நடந்த விபத்து போல நடந்து விடுமோ என்ற பீதி மக்களிடம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior