
புவனகிரி:
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அழிக்சிக்குடி ஊராட்சியை சேர்ந்த வண்டுராயன்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.
சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி, தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அழிச்சிக்குடி ஊராட்சி மன்ற தலைவர்டி கவிதா பாரி வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு 176 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில் ஒன்றியக்குழு தலைவர்கள் கீதா, ஜெயபாலன், அசோகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவப்பிரகாசம், புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவர் வள்ளி சச்சிதானந்தம், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், கலையரசி, புவனகிரி தொகுதி செயலாளர் கருப்பன், இணை செயலாளர் லட்சுமி நாராயணன், புவனகிரி நகர அவைத்தலைவர் கனகராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் லெனின், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன்,
ஒன்றிய ஜெயலலிதா பேரவை சீனுவாசன், அமைச்சரின் உதவியாளர் ஜெயசீலன், வண்டுராயன் பட்டு ஊராட்சி செயலாளர் ரகுநாதன், கிளை செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் வருவாய் அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணை தலைவர் உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 720 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக