உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 11, 2011

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் சபரிமலை சுற்றுலா ரெயில் திட்டம்


           இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  கோடை வாசஸ்தலங்கள், புனித யாத்திரை மையங்களுக்கு சுற்றுலா “பேக்கேஜ்” அறிமுகப்படுத்தி பாதுகாப்பான ரெயில் பயணத்தை அளித்து வருகிறது.  

 சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு சிறப்பு பேக்கேஜ் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. மண்டல மேலாளர் கே. ரவிக்குமார் கூறியது:-

             ஐ.ஆர்.சி.டி.சி. கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் சபரிமலை அய்யப்பன் தரிசனத்துக்காக சிறப்பு யாத்திரைகளை நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் நடத்த முடிவு செய்துள்ளது. அய்யப்ப பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் உறுதி செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு ரெயில் டிக்கெட்டுகளுடன் இந்த சபரிமலை யாத்திரை ரெயில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.    இந்த மாதம் 21, 24, டிசம்பர் 1, 5, 15, 19, 22 மற்றும் ஜனவரி 5 ஆகிய தேதிகளில் சபரிமலை ரெயில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒருவர் சென்னையில் இருந்து செல்லவும், தரிசனம் முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பவும் என 4 நாட்கள் பயணத்துக்கு ரூ.1,890 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

            இந்த கட்டணத்தில் உறுதி செய்யப்பட்ட 2-ம் வகுப்பு படுக்கை வசதி மற்றும் கோட்டயம்-நிலக்கல்-கோட்டயம் சென்றுவர வாகன வசதி உட்பட்டது. குறைந்த நாட்களில் சிரமம் இல்லாமல் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசனம் செய்து உடனடியாக சென்னை திரும்புவதற்கு வசதியாக இந்த பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.    சபரிமலை யாத்திரை பயணம் செய்ய விரும்புபவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 
 
மேலும் விவரங்களுக்கு 
 
044-64594959, 90031-40681 
 
 
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 
 
 
 
 More  details 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior