நெய்வேலி:
நெய்வேலி அருகே ஊ.மங்கலம் கோட்டேரி மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக கிளினிக் வைத்து நோயாளி ளுக்கு மருத்துவம் பார்த்து வந்தவர் நாராயணசாமி. இவரது சிகிச்சையில் பலருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தனர். மேலும் இவரது சிகிச்சை மீது பலருக்கு அதிருப்தி இருந்து வந்தது.
இவர் எம்.பி.பி.எஸ் டாக்டர் தானா என்பதில் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பலர் அப்பகுதி கிராம நிர்வாகி வெங்கடாசலத்திலடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் நாராயணசாமி நடத்தி வந்த கிளினிக்குக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழோ கிளினிக் நடத்துவதற்கான அனுமதியோ, ஆவணங்களோ இல்லை. மேலும் நாராயணசாமி எஸ்.எஸ்.எல்.சி. மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து நாராயணசாமியை போலீசார் கைது செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக