கடலூர்:
கடலூரில் மழைநீர் தேங்கிய பகுதிகளை நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கடலூர் நகரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவற்றை நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் உறுப்பினர்களுடன் சென்று பார்வையிட்டார். செல்லங்குப்பம், முதுநகர், பச்சாங்குப்பம், வண்டிப்பாளையம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
நகராட்சியில் இருந்து பொக்ளின் இயந்திரத்தை வரவழைத்து, வாய்க்கால் அடைப்புகளை அகற்றி மழைநீர் வழிந்தோட ஏற்பாடு செய்தார். நகரில் எந்தெந்த சாலைகள் உடனடியாக செப்பனிட வேண்டிய நிலையில் உள்ளன என்பதை நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக அந்த சாலைகளைச் சீரமைக்க ஜல்லி, மணல் சிமென்ட உள்ளிட்ட பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருவதையும் அவர் பார்வையிட்டார். தாற்காலிக சாலைப் பணிகளை உடனடியாக தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கனமழை பெய்வதால் சாலைகளைத் தாற்காலிகமாக சீரமைக்கும் பணிகளைத் தொடங்க முடிவில்லை. மழை சற்று ஓய்ந்ததும் போர்க்கால அடிப்படையில் சாலைகள் சீமைக்கப்படும், பழுதான சாலைகளில் சிமென்ட் தளம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக