(1) கடலூர் தேவனாம்பட்டினத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார். (2) காரைக்கால் கடலோரப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆபரேசன் ஹாம்லா-2 என்ற பெயரில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் போலீஸார் இந்த ஒத்திகைத் தணிக்கையை மேற்கொண்டனர்
கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கடலோர கிராமங்களில் சந்தேக நபர்கள் வந்தால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடலோரப் பகுதிகளில் போலீஸ் தணிக்கைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பகுதி மக்களும், போலீஸாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த ஹாம்லா ஆபரேசன் 2 என்ற ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது. எனவே கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த அதிரடி சோதனை, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் மேற்பார்வையில், கடலூர் மாவட்ட கடலோரக் கிராமங்களில் நடத்தப்பட்டது. வல்லம்படுகை முதல் நல்லவாடு வரை உள்ள கடலோரக் கிராமங்களில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகப்படும் நபர்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். கடலோர கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள போலீஸ் தணிக்கைச் சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடலோர கிராமங்களுக்கு வரும் படகுகள், அவற்றில் பணிபுரியும் மீனவர்கள் அனைவரும் சோதனையிடப்பட்டனர். கடற்கரைப் பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. ÷கடலோரக் கிராமங்களை ஒட்டிய நகரப் பகுதிகளிலும் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தீவிரவாதிகள் போல் வேடமிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் கடலூர் துறைமுகம் சிங்காரத் தோப்புப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்த தீவிர வேட்டை வியாழக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில்...

புதுச்சேரியில் தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை எவ்வாறு பிடிப்பது என்பது குறித்து ஹாம்லா ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி பகுதி கடற்கரை வழியாக 8 பேர் ஊடுருவினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் 5 பேரை பிடித்தனர். மூவர் தப்பிவிட்டனர். அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் கைப்பற்றினர். இதேபோல் காரைக்கால், வம்பாகீரப்பாளையம், குருசுகுப்பம், தேங்காய்திட்டு, நல்லவாடு உள்ளிட்ட மீனவ கடற்கரை கிராமங்களில் ஹாம்லா ஆபரேஷன் ஒத்திகை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகளைப்போல் போலீஸாரே படகுகள் மூலம் கடற்கரை வழியாக ஊடுருவினர். அதை மற்றொரு போலீஸ் படை கண்டுபிடித்தனர். தீவிரவாதிகள் ஊடுருவினால் எச்சரிக்கையாக இருப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக