உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கலெக்டர் வி.அமுதவல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலெக்டர் வி.அமுதவல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 27, 2011

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 37 லட்சம் ஒதுக்கீடு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/1c680c46-e3bd-4436-ade6-f6bacdc62e3c_S_secvpf.gif
 
 
கடலூர்:: 

கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:-


              தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு 2011-12 ம் ஆண்டிற்கு தமிழக அரசால் முதல் தவணையாக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
                 இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் ஆய்வகங்கள், பள்ளிகளுக்கான கழிவறைகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர மையங்கள் கால்நடை மருந்தகங்கள், நூலகங்கள், மதிய சத்துணவு கூடங்கள், அரசு நியாய விலை கடைகள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் குடிநீர் ஆதாரங்கள் உருவாக்குதல் பாலங்கள், சிறுபாலங்கள், சாலைகள் தரம் உயர்த்துதல், தெருக்கள் மற்றும் சிறிய சந்துக்கள் சிமெண்டு சாலையாக அமைத்தல், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், தெருவிளக்குகள் அமைத்தல் மேம்பாடு செய்தல் மற்றும் அவற்றை பராமரித்தல், அரசு பள்ளிகள், நூலகங்கள் போன்றவற்றிற்கு புதிய தளவாட சாமான்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற பணிகளை எடுத்து செய்யலாம்.

       தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்ய தனிநபர், குழு, நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் பொது மற்றும் தனியார் துறையை சார்ந்த யார் வேண்டுமானாலும் பணியின் மதிப்பீட்டு தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்குத் தொகை மாவட்ட ஆட்சியரின் தன்னிறைவுத் திட்ட நிதி என்ற பெயரில் கேட்பு காசோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 50 சதவீதத்திற்கு மேல் பங்களிப்பு தொகை செலுத்துவோர் டெண்டர் இல்லாமல் அப்பணியை அவரே எடுத்து செய்யலாம்.

             இத்திட்டம் கிராம பகுதி களிலும், நகரப்பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் செயல் படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரையோ, நகராட்சி ஆணையரையோ அல்லது பேரூராட்சி நிர்வாக அதிகாரியையோ அணுகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read more »

வியாழன், நவம்பர் 03, 2011

கடலூரில் ரூ.1.61 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர்:

           கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில், ரூ. 1.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வழங்கினார். 10 பேருக்கு தலா ரூ. 2,749 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், 5 பேருக்கு தலா ரூ. 2,880 மதிப்பிலான இஸ்திரிப் பெட்டிகள், மழையினால் சுவர் இடிந்து இறந்துபோன மாணவர் கிஷோர்ராஜுவின் (6) குடும்பத்தாருக்கு, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.













Read more »

சனி, ஆகஸ்ட் 13, 2011

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தினவிழா: ஆட்சியர் அமுதவல்லி கொடி ஏற்றுகிறார்

கடலூர்:

           கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                   மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15ம் தேதி கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் அமுதவல்லி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் தியாகிகளை கவுரவிக்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 223 பயனாளிகளுக்கு 24.38 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்குகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 




Read more »

வியாழன், ஜூலை 21, 2011

அனைத்து தொழிலாளர்களையும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்

கடலூர்:

           அனைத்து நிறுவனங்களின் தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வலியுறுத்தினார். 

           இ.எஸ்.ஐ. கார்பரேஷன் நிறுவனத்தின் வைரவிழாவை முன்னிட்டு, கடலூரில் உள்ள தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுக்கு, விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடந்தது.  

விழாவை மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்துப் பேசியது: 

           இ.எஸ்.ஐ. வசதிகளை பயன்படுத்திக் கொள்ளத் தகுதியான தொழில் நிறுவனங்கள் பல, கடலூர் மாவட்டத்தில் உள்ளன. மாத வருவாய் ரூ. 12 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும், இ.எஸ்.ஐ. மருத்துவ வசதிகளை அளிக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு இ.எஸ்.ஐ. திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இயந்திரங்களை பயன்படுத்தும்  நிறுவனங்களில் 10 நபர்களும், இயந்திரங்களை பயன் படுத்தாத நிறுவனங்களில் 20 நபர்களும் வேலையில் இருந்தால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். 

             இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் மனைவியருக்கு மகப்பேறு உதவிகள், தொழிலாளர்கள் காயம் அடையும் போதும், உடல் நலம் பாதிக்கப்படும் போதும், மரணம் அடைந்தாலும் உதவிகள் வழங்கப் படுகிறது. இதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.  நிகழ்ச்சியில் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி நாராயணசாமி, சென்னை மண்டல இ.எஸ்.ஐ. கூடுதல் ஆணையர் கே.பத்மஜா நம்பியார், இயக்குநர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 




Read more »

திங்கள், ஜூலை 04, 2011

திட்டக்குடி வெலிங்டன் ஏரி ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு: கலெக்டர் அமுதவல்லி பார்வையிட்டார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/63bf98bc-5f55-4219-96e1-f94d86855fa6_S_secvpf.gif

திட்டக்குடி:

              திட்டக்குடியை அடுத்துள்ள வெலிங்டன் ஏரியில் ரூ.20 கோடி செலவில் கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏரி மூலம் 67 கிராமங்களை சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. திட்டக்குடி வந்திருந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி இந்த ஏரியை நேரில் பார்வையிட்டார்.

                மேலும் வாய்க்கால்களின் தற்போதிய நிலை, நீர் பிடிப்பு சீரமைக்கப்பட்டுள்ள கரை பகுதி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆனந்தகுடி, தேவங்குடி, டீ.வி. புத்தூர் வெள்ளாற்றங்கரையில் ரூ.15 கோடி செலவில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகள், இப்பகுதியில் இயங்கும் மணல் குவாரி ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார் பொதுப்பணிதுறை செயற் பொறியாளர் பழனிகுமார், உதவி செயற் பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் வெல்லிங்டன் ஏரி குறித்தும், வெள்ள தடுப்பு பணிகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

                   அரசு நீரினை பயன் படுத்துவோர் சங்கத்தலைவர் மருதாசலம் மற்றும் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் நலன் கருதி திட்டக்குடி பகுதி பகுதியில் இயங்கும் நெல் கொள் முதல் நிலையங்கள் தொடர்ந்து மேலும் 1 மாதத்திற்கு இயக்க வேண்டும் நெல் கொள்முதலில் வியாபரிகளின் தலையீட்டை தவிர்க்க வேண்டும் என முறையிட்டனர்.
மாவட்ட கலெக்டர் அமுதவல்லி விவசாயிகளிடம் பேசும் போது, 

               நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நலன் கருதிதான் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதில் வியாபாரிகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. தற்போது நெல் பயிரிடப்படும் பாசன பகுதி நெல் அறுவடை செய்யும் விவசாயிகளின் நலன் பாதிக்கபட்டுள்ளதா? ஆகியவை குறித்து ஆய்வு செய்து, அவசியம் ஏற்பட்டால் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்






Read more »

புதன், ஜூன் 15, 2011

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் வாடகை வாகனம் பயன்படுத்துவதால் அரசு பணம் விரயம்


கடலூர்: 

             கடலூர் கலெக்டர் அலுவலக வி.ஐ.பி., கார் தயார் நிலையில் இருக்கையில், ஒரு சில அதிகாரிகள், வாடகைக் கார்களைப் பயன்படுத்துவதால், அரசு பணம் விரயமாகிறது.

             கடலூர் மாவட்டத்திற்கு வரும் வி.ஐ.பி., க்களை வரவேற்பதற்காக, குளிர் சாதன வசதியுடன் கூடிய, இரண்டு ஸ்கார்பியோ கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டி.என்.01. ஏஜி.4444 என்ற ஸ்கார்பியோ கார், புதிதாக வழங்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில், விபத்திற்குள்ளானது. இதுவரை 36 ஆயிரம் கி.மீ., மட்டுமே ஓடியுள்ளது. விபத்து நடந்து, 2 ஆண்டுகள் கடந்தும், 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் இதுவரை சரிசெய்ய எவ்வித முயற்சியும் எடுக்காமல், தனியார் ஒர்க் ஷாப்பில் மக்கிக் கிடக்கிறது. மற்றொரு வி.ஐ.பி., கார் (டி.என்.31.ஜி.6666) நல்ல நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

             குளிர் சாதன வசதியுடன் உள்ள இந்த கார், தயார் நிலையில், வெறுமனே நிறுத்தப்பட்டு கிடக்கிறது. இந்த காரை, வி.ஐ.பி., க்கள் வருகைக்காக பயன்படுத்தாமல், வாடகை அதிகமுள்ள இனோவா காரை, அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். நேற்று சென்னையில் இருந்து வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கூட, வி.ஐ.பி., காரை பயன்படுத்தாமல், வாடகைக்கு இனோவா எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வரும் இந்த ஆட்சியில் அரசு, பணத்தை விரயம் செய்து வருபவர்கள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

திங்கள், ஜூன் 13, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

          ஆதிதிராவிட நல விடுதிகளில் 2011-12 கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 

இது குறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

            கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் இலவச உணவு, உறைவிடமும் வழங்கப்படும். சிறப்பு வழிகாட்டி இலவசமாக அரசால் வழங்கப்படும்.இந்த விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விடுதியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் அருகில் உள்ள விடுதி காப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். 

                  சேர விரும்புவோர், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள்ளும், கல்லூரி முதுகலை பட்டதாரி விடுதிகளில் சேர விரும்புவோர் வரும் ஜூலை 15ம் தேதிக்குள்ளும், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior