உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விருத்தகிரஸ்வரர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தகிரஸ்வரர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விருத்தாசலம்

 

 விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்;

 

 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
 விருத்தாசலம்:



                     விருத்தாசலம் கடை வீதியில் புகழ்பெற்ற விருத்த கிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமிக்கு காலையில் சிறப்பு பூஜை, அபிஷேகமும், இரவு வீதி உலா நடைபெற்று வந்தது.   விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று  காலை நடைபெற்றது.

                  வினாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் அலங்கரித்து தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு வலம் வந்தது. கிழக்கு கோபுர வாசலில் இருந்து புறப்பட்ட தேர்கள் தெற்கு கோபுர வீதி, மேற்கு கோபுர வீதி, வடக்கு கோபுர வீதி வழியாக மீண்டும் கிழக்கு கோபுர வீதியில் நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், ஆர்.டி. அரங்கநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொழில் அதிபர் அகர்சந்த் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

              பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்ட விழாவையொட்டி விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Read more »

திங்கள், ஜனவரி 31, 2011

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


கடலூர்: 

            கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப், பாத யாத்திரை சென்ற 1,000 பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

              
               ஒவ்வொரு ஆண்டும் விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள, கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சியை அடுத்த, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் பாத யாத்திரை சென்று, தங்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று துவங்கியது. பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை போட்டு விரதமிருந்து, நேற்று பாத யாத்திரையைத் துவக்கினர். முன்னதாக பாத யாத்திரை செல்லும் 1,000 பக்தர்களும் நேற்று காலை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சமயபுரம் மாரியம்மனின் படத்தை வைத்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளைச் செய்தனர். பின் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு தங்கள் பாத யாத்திரையைத் தொடங்கினர்.

Read more »

சனி, ஜூன் 05, 2010

விருத்தாசலம் கோவில் சைரன் அடித்ததால் திடீர் பரபரப்பு

விருத்தாசலம் : 

                        விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் "எச்சரிக்கை சைரன்' அடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவிலில் உண்டியல், கோபுரம், சுவாமி நகை பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை உள்ளிட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க "எச்சரிக்கை சைரன்' ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் இரவு நேரங்களில் இக் கருவியை "ஆன்' செய்துவிட்டு கோவிலை பூட்டிச் செல்வது வழக்கம்.

                 நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து "எச்சரிக்கை சைரன்' அடித்தது. ஐந்து நிமிடம் "சைரன்' அடித்ததால் கோவிலைச் சுற்றியிருந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் கோவில் உள்ளே திருடர்கள் இருக்கலாம் என அஞ்சினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், கோவிலை திறந்து முக்கிய இடங்களை பார்வையிட்டனர். பின், திருட்டு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது 

                  "கோவிலில் பூனை, வவ்வால்கள் ஏதேனும் பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்ட இடங்களில் உள்ள பொருட்களை தொட்டிருக்கலாம். அதனால், "சைரன்' அடித்திருக்கலாம் அல்லது கருவியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு "சைரன்' அடித்திருக்கலாம். கருவியை சோதனை செய்து பார்த்தால் தெரியும்' என்றனர்.

Read more »

வியாழன், மார்ச் 04, 2010

நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் சமாதான கூட்டத்தில் கைவிட முடிவு

விருத்தாசலம்:

                     விருத்தாசலத்தில் நேற்று நடைபெற இருந்த கோவில் நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவால் கைவிடப்பட்டது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு கோவிலுக்கு சொந்தமான நந்தவன இடம் உள்ளது.
                   
                                 இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு வாகன நிறுத்தம் அமைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகர வாழ் மக்கள் மற்றும் வட்டார மக்கள் சார்பில் நேற்று (3 ம் தேதி) கோவில் நந்தவனத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது என அறிவித்திருந்தனர்.இதையடுத்து நேற்று காலை தாசில்தார் ஜெயராமன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. சேர்மன் முருகன், கவுன்சிலர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், சப் இன்ஸ் பெக்டர் கண்மணிசுப்பு மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன நிறுத்தம் அமைக்கப்படும் எனவும், அதற்கு ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என கேட்டார். இதை ஏற்று நேற்று நடைபெற இருந்த போராட்டம் கைவிடப் பட்டது.



Read more »

புதன், மார்ச் 03, 2010

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்

விருத்தாசலம் :

                     விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை யொட்டி தெப்ப உற்சவம் நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 19 ம் தேதி தொடங்கி தொடர்ந்து பத்து நாட்களாக நடந்து வருகிறது. சாமிகள் வீதி உலா, தேரோட்டம், மகத் திருவிழாக்கள் முடிந்து நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. காலை அபிஷேக ஆராதனையுடன் தொடங்கி இரவு அலங்காரம் செய்த புஷ்ப விமானத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து நள்ளிரவு புதுப்பேட்டை அம்மன் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நகராட்சி சார்பில் நடந்த தெப்ப திருவிழாவில் சேர்மன் முருகன், கமிஷனர் திருவண்ணாமலை, கவுன்சிலர்கள் ராமு, பாபு, கர்ணன், விஜயலட்சுமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read more »

திங்கள், மார்ச் 01, 2010

கிள்ளை கடற்கரையில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு தீர்த்தவாரி

 கிள்ளை : 

              கிள்ளை மாசிமக திருவிழாவில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி உட்பட நூற்றுக் கும் மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர் கள் கடலில் நீராடி தரிசனம் செய்தனர்.
                  சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்கத்துறையில் மாசிமக  தீர்த்தவாரி நேற்று நடந்தது. அதனையொட்டி சுற்று வட்டார பகுதியில் உள்ள நூற்றுக் கும் மேற் பட்ட கோவில்களில் இருந்து உற்சவர்கள் அதிகாலை முதல் முழுக் கத்துறை வெள்ளாற்றங்கரையில் வரிசையாக எழுந் தருள செய்து தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக் கான பக்தர்கள் கடலில் நீராடி சாமியை தரிசனம் செய்தனர். மாசிமக தீர்த்தவாரிக் காக ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி நேற்று முன்தினம் நள்ளிரவே கிள்ளை கொண்டுவரப்பட்டு  தைக் கால் மாரியம்மன் கோவிலில் தங்க வைத்தனர். நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் அறங்காவல் குழுத்தலைவர் செல்வக்குமார், செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிள்ளை தைக் கால் பள்ளிவாசலில் சிறப்பு பாத்தியா ஓதி பூவராகசாமிக்கு பட்டு சாத்தி வரவேற்கப்பட்டது. பின்னர் பிரசாதம் வழங் கப்பட்டது. அதில் கிள்ளை பேரூராட்சி சேர் மன் ரவிச்சந்திரன், தைக் கால் டிரஸ்ட்டி முத்தவல்லி சையத் காப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வடலூர் சத்திய பேரொளி அறநெறி தொண்டு நிறுவனம், மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி மன்றம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. 

விருத்தாசலம்: 

                 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 19 ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று மாசி மகத்தை முன்னிட்டு விருத்தாம் பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மணிமுக்தா ஆற்றில் எழுந்தருளி தீர்த்தாவரி மற் றும் தீபாராதனை நடந்தது. இதில் பல்லாயிரக்கனக் கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும், பலர் இறந்த தங்கள் மூதாதையர்களுக்கு மணிமுக்தாற்றில் தர்ப்பணம் கொடுத்தனர்.
பரங்கிப்பேட்டை: 

                புதுப்பேட்டை கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று நடந்தது. புவனகிரி, ஆதிவராகநல்லூர், தச்காடு, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி  உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாமிகள் தீர்த்தவாரிக்கு கொண்டுவரப் பட்டன.
குறிஞ்சிப்பாடி:

               சுப்ராயர் சாமிக்கு புதுப்பேட்டை கிராம நிர்வாகிகள் நமச்சிவாயம், குட்டியாண்டி தலைமையில் கிராமத்தினர் வரிசை எடுத்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தனர். இதேபோல் சாமியார்பேட்டை, பெரியகுப்பம் பகுதி கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:  

              கூடலையாத்தூரில் வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரு ஆறுகளும் கூடும் இடத்தில் நேற்று மாசி மக உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ் வரர் சுவாமி மற்றும் வலகாடு வரதராஜப் பெருமாள் சுவாமிகள் தீர்த்தவாரிக்காக ஆற்றுக்கு வந்து பின்னர் தீர்த்தவாரி நடந் தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக் தர்களுக்கு அருள்பாலித் தார். பலர் இறந்த தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Read more »

திங்கள், பிப்ரவரி 15, 2010

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் விருத்தகிரஸ்வரர் கோவிலில் சத்யசாயி சேவா சமிதி உழவாரபணி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சத்யசாயி சேவா சமிதி சார்பில் திருக்கோவில் முழுவதும் உழவாரபணி நடந்தது. இதில் கடலூர் மாவட்ட சத்யசாயி சேவா சமிதி தலைவர் பிரசாத், ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், விருத் தாசலம் சாய் சமிதி கன்வீனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை வரலாறு பற்றி வில்லு பாட்டு மூலம் மாணவர்கள் பாடினர். இதில் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி, சண்முகம், சந்தான கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior