விருத்தாசலம் :
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் "எச்சரிக்கை சைரன்' அடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவிலில் உண்டியல், கோபுரம், சுவாமி நகை பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை உள்ளிட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க "எச்சரிக்கை சைரன்' ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தினர் இரவு நேரங்களில் இக் கருவியை "ஆன்' செய்துவிட்டு கோவிலை பூட்டிச் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து "எச்சரிக்கை சைரன்' அடித்தது. ஐந்து நிமிடம் "சைரன்' அடித்ததால் கோவிலைச் சுற்றியிருந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் கோவில் உள்ளே திருடர்கள் இருக்கலாம் என அஞ்சினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், கோவிலை திறந்து முக்கிய இடங்களை பார்வையிட்டனர். பின், திருட்டு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.
இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது
"கோவிலில் பூனை, வவ்வால்கள் ஏதேனும் பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்ட இடங்களில் உள்ள பொருட்களை தொட்டிருக்கலாம். அதனால், "சைரன்' அடித்திருக்கலாம் அல்லது கருவியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு "சைரன்' அடித்திருக்கலாம். கருவியை சோதனை செய்து பார்த்தால் தெரியும்' என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக