உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

கிள்ளை கடற்கரையில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமிக்கு தீர்த்தவாரி

 கிள்ளை : 

              கிள்ளை மாசிமக திருவிழாவில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி உட்பட நூற்றுக் கும் மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர் கள் கடலில் நீராடி தரிசனம் செய்தனர்.
                  சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்கத்துறையில் மாசிமக  தீர்த்தவாரி நேற்று நடந்தது. அதனையொட்டி சுற்று வட்டார பகுதியில் உள்ள நூற்றுக் கும் மேற் பட்ட கோவில்களில் இருந்து உற்சவர்கள் அதிகாலை முதல் முழுக் கத்துறை வெள்ளாற்றங்கரையில் வரிசையாக எழுந் தருள செய்து தீர்த்தவாரி நடந்தது. ஆயிரக்கணக் கான பக்தர்கள் கடலில் நீராடி சாமியை தரிசனம் செய்தனர். மாசிமக தீர்த்தவாரிக் காக ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி நேற்று முன்தினம் நள்ளிரவே கிள்ளை கொண்டுவரப்பட்டு  தைக் கால் மாரியம்மன் கோவிலில் தங்க வைத்தனர். நேற்று காலை 9 மணிக்கு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் அறங்காவல் குழுத்தலைவர் செல்வக்குமார், செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிள்ளை தைக் கால் பள்ளிவாசலில் சிறப்பு பாத்தியா ஓதி பூவராகசாமிக்கு பட்டு சாத்தி வரவேற்கப்பட்டது. பின்னர் பிரசாதம் வழங் கப்பட்டது. அதில் கிள்ளை பேரூராட்சி சேர் மன் ரவிச்சந்திரன், தைக் கால் டிரஸ்ட்டி முத்தவல்லி சையத் காப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வடலூர் சத்திய பேரொளி அறநெறி தொண்டு நிறுவனம், மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி மன்றம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. 

விருத்தாசலம்: 

                 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கடந்த 19 ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று மாசி மகத்தை முன்னிட்டு விருத்தாம் பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மணிமுக்தா ஆற்றில் எழுந்தருளி தீர்த்தாவரி மற் றும் தீபாராதனை நடந்தது. இதில் பல்லாயிரக்கனக் கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும், பலர் இறந்த தங்கள் மூதாதையர்களுக்கு மணிமுக்தாற்றில் தர்ப்பணம் கொடுத்தனர்.
பரங்கிப்பேட்டை: 

                புதுப்பேட்டை கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று நடந்தது. புவனகிரி, ஆதிவராகநல்லூர், தச்காடு, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி  உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாமிகள் தீர்த்தவாரிக்கு கொண்டுவரப் பட்டன.
குறிஞ்சிப்பாடி:

               சுப்ராயர் சாமிக்கு புதுப்பேட்டை கிராம நிர்வாகிகள் நமச்சிவாயம், குட்டியாண்டி தலைமையில் கிராமத்தினர் வரிசை எடுத்து அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தனர். இதேபோல் சாமியார்பேட்டை, பெரியகுப்பம் பகுதி கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:  

              கூடலையாத்தூரில் வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரு ஆறுகளும் கூடும் இடத்தில் நேற்று மாசி மக உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ் வரர் சுவாமி மற்றும் வலகாடு வரதராஜப் பெருமாள் சுவாமிகள் தீர்த்தவாரிக்காக ஆற்றுக்கு வந்து பின்னர் தீர்த்தவாரி நடந் தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக் தர்களுக்கு அருள்பாலித் தார். பலர் இறந்த தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior