உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 10, 2009

அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி

அக்டோபர், 09- 2009

கடலூர்:
    
        தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிக்கான இடைத்தேர்தல் 7-ந் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடந்தது.

           கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் தமிழரசன் வெற்றி பெற்றுள்ளார். 

ஓட்டுகள் விவரம் வருமாறு:-

         தமிழரசன்-146 (தே.மு.தி.க.), மங்கையர்க் கரசி-124 (தி.மு.க.). 

லால்பேட்டை பேரூராட்சி
 
           லால்பேட்டை பேரூராட்சி 3-வது வார்டு கவுன் சிலர் பதவிக்கான தேர்தலில் த.மு.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். 

ஓட்டுகள் விவரம் வரமாறு:-
 
         யாசர் அரபாத்-102 (தே.மு.தி.க.), சிராஜுதீன்-85 (சுயே).
 
விருத்தாசலம்

              விருத்தாசலம் நகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் காசிநாதன் 999 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மணிகண்டன் 876 ஓட்டுகள் பெற்றார்.
 
         இதேபோல் விருத்தாசலம் ஒன்றியம் எம்.புதூர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் தேர்த லில் 150 வாக்குகள் பெற்று முருகையனும், எம்.பரூர் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் முருகேசன் 325 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
          

Read more »

ஸ்டிரைக் வாபஸ் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்

நெய்வேலி:

             நெய்வேலி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்திடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

               இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி இரவு 10 மணி முதல் என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் என்.எல்.சி. நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

            அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன், கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், என்.எல்.சி. நிறுவன சேர்மன் அன்சாரி, நிறுவன இயக்குனர்கள் சுரேந்தர்மோகன், பாபுராவ், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பேச்சுவார்த் தையில் கலந்து கொண்டனர்.

             சுமார் 3 மணி நேர பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ரூ.51 ஆயிரம் போனஸ் மற்றும் இன்சென்டிவ் தொகையாகவும், வருகை பதிவின் அடிப்படையில் கூடுதல் ஊக்க தொகையாக ரூ.8160 வழங்கவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்டது. மேலும் ஒப்பந்த தொழிலாளர் சீனியாரிட்டி பட்டியலை 2 மாதங்களில் வெளியிடவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக தலா ரூ.500 வழங்கவும் நிர்வாக தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. 

              பேச்சுவார்த்தை உடன் பாட்டை தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். இன்று காலையிலும் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.

Read more »

வெள்ளி, அக்டோபர் 09, 2009

பண்ருட்டி அருகே இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவன்- மாமியார் மீது போலீசில் புகார்

பண்ருட்டி:

              பண்ருட்டி அருகே பக்கிரிபாளையம் சின்ன பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 27). இவரது மனைவி ஜரினா பேகம் (25). இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத் துக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்த அப்துல்ரகுமான் பின்னர் வெளிநாடு செல்ல வில்லை.

               திருமணமான சில மாதங்கள் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த அப்துல் ரகுமான் அதன்பிறகு ஜரினாபேகத்தை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்துல் ரகுமானின் தாய் சலிமாபீ, தம்பி இஸ்மாயில் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து ஜரினாபேகம் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்துல் ரகுமான் மற்றும் அவரது தாய், தம்பி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 73 சதவீத ஓட்டுப்பதிவு நாளை வாக்கு எண்ணிக்கை

கடலூர்:

             தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடை தேர்தல் நேற்று நடைபெற்றது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் காலி யாக உள்ள பதவிகளுக்கு இடைதேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங் கிய ஓட்டு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பல ஓட்டு சாவடிகளில் வாக் களார்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

                கடலூர் மாவட்டம் மங்களூர் யூனியன் 14-வது வார்டுக்கான தேர்தல் 71.6 சதவீதமும், 21-வது வார்டில் 70.4 சதவீதமும், பரங்கிப்பேட்டை யூனியன் சிலம்பிமங்கலம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 77 சத வீதமும், விருத்தாசலம் யூனியன் எருமனூர் பஞ்சா யத்து தலைவர் தேர்தலில் 85 சதவீதமும் ஓட்டுகள் பதி வானது.

                எம்.பரூர் பஞ்சாயத்து 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 52.7 சதவீதமும், புதூர் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 66.5 சதவீதமும், எம்.புளியங்குடி 1-வது வார்டில் 62.6 சதவீதமும், எம்.புளியங்குடி 2-வது வார்டில் 77.8 சதவீதமும், போத்திர மங்கலம் 3-வது வார்டில் 52.6 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

                 அண்ணாமலை நகர் பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 93 சதவீதமும், லால்பேட்டை 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 69 சதவீதமும், விருத்தாசலம் நகராட்சி 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 83.5 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

             கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சியில் காலியான பதவிகளுக்கு நடைபெற்ற இடை தேர்தலில் சராசரியாக 73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இடைத்தேர்தல் நடந்த அனைத்து வாக்கு சாவடி மையங்களின் வாக்குகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒரு சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிந்து விடும்.

Read more »

கடலூர் கல்வி கடன் முகாம்

கடலூர்:

              கடலூர் மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக சுகாதாரதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு கல்வி கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

             பின்னர் கல்வி கடனுக்காக தேர்வு செய்யப்பட்ட 291 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் கடன் தொகையை ப.சிதம்பரம் வழங்கினார்.  இதையடுத்து மாணவர்களுக்கான கடன் வழங்கும் முகாமில் அமைக்கப்பட்டு இருந்த இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி. வங்கி உள்ளிட்ட 25 வங்கி ஸ்டால்களில் கல்வி கடனுக்கான விண்ணப் பங்களை மாணவர்கள் கொடுத்தனர். அனைத்து வங்கிகளிலும் கல்வி கடன் கேட்டு மொத்தம் 10 ஆயிரத்து 404 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

              இதில் 3571 மாணவர்களின் கடன் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.41 கோடியே 60 லட்சம் கடனுக்கான முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது கடலூரில் நடந்த விழாவில்தான். மேலும் இங்குதான் கல்வி கடனுக்கு அதிக தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கே.எஸ். அழகிரி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Read more »

வியாழன், அக்டோபர் 08, 2009

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

கடலூர் :

            தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபர் 7-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதியுடன் முடிவடைகிறது.  இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக மற்ற காலி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

                கடலூர் மாவட்டத்தில் நல்லூர் ஒன்றியம் ஐவதுகுடி ஊராட்சி, பண்ருட்டி ஒன்றியம், தொளப்பாக்கம் ஊராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், சிலம்பிமங்கலம் ஊராட்சி, விருத்தாசலம் ஒன்றியம், எருமனூர் ஊராட்சி ஆகிய 4 ஊராட்சி தலைவர் பதவிக்கும், விருத்தாசலம் நகராட்சி 3-வது, அண்ணாமலை நகர் பேரூராட்சி 3-வது வார்டு, லால்பேட்டை பேரூராட்சி 2-வது வார்டு ஆகிய கவுன்சிலர் பதவிக்கும் மற்றும் கடலூர், கம்மாபுரம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கீரப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.

                  தேர்தல் நடந்த அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குபதிவையொட்டி வாக்குசாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லை: சுகாதாரத்துறை

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று கடலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஜெயவீர குமார் கூறினார். மத்திய அரசின் சார்பில் சிதம்பரத்தில் பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்கம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசிய டாக்டர் ஜெயவீர குமார் கூறுகையில், 

                    "கடலூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே இந்த நோய் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை" என்றார். பன்றிக்காய்ச்சல், காசநோய், எய்ட்ஸ், மலேரியா, யானைக்கால் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்துவதில் பள்ளி மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read more »

கடலூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு தீ வைப்பு

கடலூர் :

            கடலூர் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த நான்கு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று இரவு சீல் வைத்தனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

               கடலூர் பேருந்து நிலையத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட கடைகள் நகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இந்த கடிகளுக்கு ஒரு சிலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர். மொத்தம் ரூபாய் நாலரை லட்சம் வரை வாடகை பாக்கி இருக்கிறது. து தொடர்பக பலமுறை அறிவுறுத்தியும் வாடகை பாக்கி செலுத்தபடவில்லை. இந்நிலையில் நேற்று இரவு நகராட்சி வருவாய் அலுவலர் திரு. ஜெயராஜ் தலைமையில் கண்காளிப்பாளர் திரு. பாஸ்கர், வருவாய் அலுவலர்கள் திரு. ரவி , திரு. ஞானதேசிகன், திரு. கார்த்திகேயன், மற்றும் நகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கி வைத்திருந்த நான்கு கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருப்பாதிரிபுலியூர் காவல்துறை ஆய்வாளர் திரு. ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior