கட லூர், நவ.27:
கடலூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய முயன்ற அதிகாரிகளை ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
கடலூர் அருகே சிப்காட் பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 1,000 ஏக்கர் நிலம் ஏற்கெனவே ஆர்ஜிதம் செய்ப்பட்டு இருக்கிறது. மேற்கொண்டும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ÷இந்நிலையில் இயற்கை எழில் மிகுந்த, மணல் குன்றுகள் நிறைந்த திருச்சோபுரம் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் நில அளவைத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.÷நி லத்தை அளந்து பல இடங்களில் கொடி நட்டு இருந்தனர். இதற்கு அப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில அளவைத் துறை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
மக்கள் எதிர்ப்பு காரணமாக நிலஅளவைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டனர்.
நிலம் கொடுத்து மறுப்பு தெரிவித்தது குறித்து திருச்சோபுரம் பிரமுகர் பாலு கூறியது: ÷த னியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு திருச்சோபுரம் கிராமத்தில் நிலம் ஆர்ஜிதம் செய்ய நில அளவைத்துறை அதிகாரிகள் முயன்றனர்.÷திருச்சோபுரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.÷இந்த நிலத்தில் சுமார் 10 ஏக்கரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகட்டி வசிக்கின்றனர். நாங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்று தெரிவித்து விட்டோம்.
வீடுகள் கட்டி இருக்கும் 10 ஏக்கர் உள்ளிட்ட 30 ஏக்கர் கோயில் நிலத்தையும் தொழிற்சாலைக்கு ஆர்ஜிதம் செய்து கொடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. கோயில் நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் எப்படி வழங்க முடியும்? என்றார் பாலு.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக