சிதம்பரம், நவ.27:
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையக்கப்படுத்தியது தொடர்பாக புதுதில்லி உச்ச நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அம் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் அல்டாமஸ்கபீர், சிரியாஸ்ஜோசப் ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்சு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.÷தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் அசோக்தேசாய், மூத்த வழக்கறிஞர் மரியசுந்தரம், அரசு வழக்கறிஞர் நெடுமாறன் ஆகியோர் ஆஜராயினர். அரசு தரப்பில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சம்பத், செயலர் முத்துசாமி ஆகியோர் ஆஜராயினர்.÷பொது தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், சி.எஸ்.வைத்தியநாதஐயர், குருகிருஷ்ணகுமார், சுப்பிரமணியசாமி ஆகியோர் ஆஜரானார்கள். சிவனடியார் உ.ஆறுமுகசாமி, ஆலய மீட்புக் குழு வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர்கள் காலின்கன்சால்வ்ஸ், பி.ஆர்.கோவிலன்பூங்குன்றம், சி.ராஜூ ஆகியோர் ஆஜரானார்கள். மேலும் இவ் வழக்கில் ஆலய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த டி.சிவராமன், குஞ்சிதபாதம், கீதா உள்ளிட்ட 5 பேர் தங்களையும் விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பு, சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பு மனுவை பொதுதீட்சிதர்கள், சுப்பிரமணியசாமி ஆகியோர் அடுத்த 2 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.÷அது வரை எந்த உத்திரவின்றி இவ்வழக்கு விசாரணை 6 வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக