விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் இறந்தார். இந்த விபத்தில் பயணிகள் 64 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், சிறுபாக்கத்தில் இருந்து நேற்று காலை விருத்தாசலத்திற்கு தனியார் பஸ் (டி.என்.32-டபுள்யூ-6175) புறப்பட்டது. வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச்சேர்ந்த டிரைவர் சிவக்குமார் (36) பஸ்சை ஓட்டி வந்தார். காலை நேரம் என்பதால் பஸ்சில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காலை 8.55 மணிக்கு எறுமனூர் மாற்றுப்பாதை பாலத்தை கடந்து விருத்தாசலத்தை நோக்கி வந்தபோது ரயில்வே ஜங்ஷன் அருகே டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து பஸ் சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந் தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ் டிரைவர் சிவக்குமார் தலைமையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த பயணிகள் 64 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி அளித்த பின் ஆபத்தான நிலையில் இருந்த பத்மாவதி(35), ராமமூர்த்தி(33), விஜயபாபு(22), ராஜேந்திரன் (27), சந்திரசேகரன்(28) உட்பட 31 பேர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 11 பெண் கள், ஒரு குழந்தை உட்பட 30 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன், டி.எஸ்.பி., ராஜசேகரன், மோட்டார் வாகன ஆய் வாளர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து விபத்து குறித்து கேட்டறிந்தனர்.விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக