நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நெல்லிக்குப்பம் நகராட்சியில் வசிப்பவர்கள் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இறுதிக்குள் பாக்கி இல்லாமல் வரியை வசூல் செய்ய முயல்கின்றனர். கடந்த ஆண்டு 80 சதவீத் துக்கு மேல் வரி வசூல் செய்தனர். நடப்பு ஆண்டில் குறிப்பிட்ட காலத் துக்குள் வரியை செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டுமென ஒரு மாதமாக விளம்பரம் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நீண்ட காலமாக குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை அதிரடியாக துண்டித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் வரிவசூல் வேகமாக நடந்து வருகிறது.
நகராட்சி ஆணையாளர் உமாமகேஸ்வரி கூறியதாவது :
மக்கள் முறையாக வரி செலுத்தினால் தான் அடிப்படை வசதிகளை செய்து தர முடியும். குறிப்பிட்ட காலத்துக்குள் வரியை செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ள வேண்டும். மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக