கடலூர்:
போக்குவரத்து அதிகாரிகள் ஒரே நாளில் நடத்திய திடீர் சோதனையில் வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.63,575 வசூலிக்கப்பட்டது.ரூ.19 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தலைமையில் 25-ம் தேதி இரவு, இரு பிரிவுகளாக மாவட்டத்தில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, கடலூர்-புதுவை சாலை ஆகியவற்றில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தணிக்கையின்போது வாகனங்களில் சிவப்பு பிரதிபலிப்பான் ஒட்டாதது கண்டுபிடிக்கப் பட்டது. 67 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை அளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில் பிற குற்றங்களும் காணப்பட்டன. புதுவை- கடலூர் சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இருவரது வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன; வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக