உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 28, 2010

திட்டக்குடி அருகே பாலம் பழுதால் போக்குவரத்து துண்டிப்பு: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாதிப்பு

திட்டக்குடி:

                திட்டக்குடி அருகே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஓடைப்பாலம் பழுடைந்து உடையும் நிலையில் இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

                திட்டக்குடி அடுத்த புதுக்குளம் கிராமம் வழியாகச் செல்லும் வெள்ளவாரி ஓடை மீது பிரிட்டிஷ் காலத்தில் சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டது. திட்டக்குடி முதல் பெருமுளை, சிறுமுளை, புதுக்குளம், நாவலூர், குமாரை, நெடுங்குளம் வழியாக வேப்பூர் மற்றும் விருத்தாசலம் வரை இணைப்பு சாலை செல்கிறது. இவ்வழியாக திட்டக்குடிக்கு பள்ளி மாணவ, மாணவிகளும் விருத்தாசலம், தொழுதூர், பெரம்பலூர் பகுதிகளுக்கு பொறியியல் கல்லூரி  மாணவ, மாணவிகள் மட்டுமின்றி தினசரி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் செல்வோர், கிராம மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் செல்கின்றனர். 

                கடந்த ஆண்டு திட்டக்குடி முதல் நாவலூர் வரை 83 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் சாலை சீரமைப்பு பணி நடந்தது. ஆனால் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வெள்ளவாரி ஓடைப்பாலத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து புதுக்குளம் உள் ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக பாலம் முற்றிலும் வலுவிழந்து உடைந்து சரிந்தது. தற்காலிகமாக இரு சக்கர வாகனம், மாட்டு வண்டிகள் மட்டும் சென்று வரும் அளவிற்கு சீரமைக்கப்பட்டது. 

               பாலம் முற்றிலுமாக உடைந்து விடும் நிலையில் இருப்பதால் கடந்த 10 நாட்களாக பஸ் போக்குவரத்து உட்பட கனரக வாகனங்கள் செல் வது நிறுத்தப்பட்டது. திட் டக்குடியிலிருந்து நாவலூர் வரை செல்லும் தடம் எண் 4 அரசு டவுன் பஸ் புதுக்குளம் கிராமத்திலேயே நிறுத்தப்படுகிறது. பாலத்தின் மறுமுனையிலுள்ள கிராம மக்கள் மூன்று முதல் நான்கு கி.மீ., தூரம் நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.

                      இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பழுதான பிரிட் டிஷ் காலத்தில் கட்டிய ஓடை பாலத்தை முழுமையாக அகற்றி, போதிய நிதி ஒதுக்கீடு செய்து போர்க் கால அடிப்படையில் புதிய பாலம் கட்டித்தர  மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior