கடலூர் :
கடலூரில் குடியிருப்பு பகுதியில் மின் கம்பி மிகவும் தாழ்வாக செல்வதால் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
கடலூர் நகரின் மையப்பகுதியான சரஸ்வதி நகரின் 5வது தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக மின் கம்பங்கள் வழியாக மின் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின் பாதை சாலையிலிருந்து 12 அடி உயரத்தில் அமைக்கப்படும். ஆனால் சரஸ்வதி நகரின் 5வது தெருவில் மின் பாதை கம்பிகள் மிக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் தெருவில் ஒன்னரை அடி உயரத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கம்பி மிகக் குறைந்த உயரத்தில் உள்ளது. தெருவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுகையில் துள்ளிக் குதித்தாலோ அல்லது பெரியவர்கள் வீட்டிற்குத் தேவையான கழி, சொரடு பேன்றவற்றை சற்று கவனக்குறைவாக எடுத்துச் சென்றாலோ மின் கம்பியில் சிக்கும் ஆபத்து உள்ளது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு, மின் கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக