பண்ருட்டி:
பண்ருட்டி நகராட்சியில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, அலுவலக நேரத்திற்கு வருகையின்மை போன்ற காரணங்களால் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த உமா மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன் மருத துவ விடுப்பில் சென்றார்.
இதனால் விழுப்புரத்திலிருந்து வரும் பொறியாளர் சுமதிசெல்வி பொறுப்பு வகித்து வருகிறார். சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மன்னார்குடியிலிருந்தும், பணி மேற் பார்வையாளர் சாம்பசிவம் கள்ளக்குறிச்சியிலிருந்தும், கட்டட ஆய்வாளர் சேகர் ஆத்தூரிலிருந்தும், மேற்பார்வையாளர் மாஜினி கடலூரிலிருந்தும் வருகின்றனர். அதிகாரிகள் அனைவரும் வெளியூரிலிருந்து வருவதால் தினமும் காலதாமதமாக காலை 11 மணிக் கும், மாலை 5 மணிக்கே சென்று விடுவதும் வழக கம்.
வாரம் தோறும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மதியமே சென்று விடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் ஞானதீபம் பணியின் போது குடிபோதையில் இருப்பதால் வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவது மட்டுமே இவரது பணியாக உள்ளது. ஒட்டுமொத்த அதிகாரிகளின் அலட்சியப் போக் கால் பண்ருட்டியில் 33 வார்டுகளிலும் சுகாதார, வளர்ச்சிப் பணிகள், சான் றிதழ் வழங்குவதில் காலதாமதம், திட்டங்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறச் சென்றால் அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. அதிகாரிகளே சரியில் லாததால் சில ஊழியர்கள் பணிக்கே வராமல் வருகைப் பதிவேட்டில் பதிந்து அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள், காங்கிரஸ் துணை சேர்மன் உள்ளிட்டோர் பல கூட்டங்களில் அதிகாரிகளை கண்டித்தும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் உள்ளனர். அதிகாரிகள் முறைகேடுகளை சேர்மன் சிறிதும் கண்டிப்பதில்லை. கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பண்ருட்டி நகராட்சியை காப்பாற்ற முடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக