உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 28, 2010

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல்: 650 பேர் கைது


 
நெய்வேலி:
 
             என்எல்சி 2-ம் சுரங்கம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 650 ஒப்பந்தத் தொழிலாளர்களை மந்தாரக்குப்பம் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் 19-ம் தேதி இரவுப்பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
                 இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை 3 முறை நடைபெற்றது.இப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தம் நடவடிக்கைகளில் இறங்கினர். ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை 2-ம் சுரங்கம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
               இதன்படி திங்கள்கிழமை மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, 2-ம் சுரங்க வாயிற்பகுதிக்குச் சென்றதும் அங்கு மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து நெய்வேலி டிஎஸ்பி மணி தலைமையிலான போலீஸôர் தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்தனர்.மறியல் போராட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் தலைமை வகித்தார். 
 
                      சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள், இளஞ்செழியன், குப்புசாமி, பொன்னுசாமி  உள்ளிட்டோர் ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும்  மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இதேபோன்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 
 
இன்று மீண்டும் பேச்சு:
 
                   என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சென்னையில் திங்கள்கிழமை மண்டல தொழிலாளர் நல ஆணையர் ஜகன்நாதராவ் முன்னிலையில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார். என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப்பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
               இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆணையர் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையின் போது நிர்வாகத் தரப்பில், உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெறுங்கள், பின்னர் பேசித் தீர்வுகாணலாம் என்று கோரியதாகக் கூறப்படுகிறது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாகவும், செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும் வெங்கடேசன் தெரிவித்தார்.
 
                          பேச்சுவார்த்தையின் போது நிர்வாகத் தரப்பில்  துணைப் பொதுமேலாளர் பெரியசாமி, கூடுதல் முதன்மை மேலாளர் அறிவு, முதுநிலை மேலாளர் சோமு உள்ளிட்டோர் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior