உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 28, 2010

கடலூரில் ரிசர்வ் வங்கியின் புதிய நாணயங்களை கொடுத்து : வியாபாரிகளிடம் மோசடி அதிகரிப்பு

கடலூர்: 

               ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சில்லறை நாணயங்களை வைத்து "கோல்மால்' செய்து, கடைக்காரர்களை ஏமாற்றி வரும் சம்பவம் கடலூரில் அதிகரித்துள்ளது. பெரிய வியாபார நிறுவனங்கள் சில்லறை தட்டுப்பாட்டை போக்க ரிசர்வ் வங்கி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை கிலோ கணக்கில் வழங்கி வருகிறது.  

               அதே போல வங்கிக் கிளைகளுக்கு தேவையான சில்லறை நாணயங்களை ரிசர்வ் வங்கியில் கேட்டுப் பெறலாம்.  ரிசர்வ் வங்கி நாணயங்கள் அனுப்பும் "கோனி' பையை வைத்து ஒரு மோசடி கும்பல், கடலூரில் பல கடைக்காரர்களை ஏமாற்றியுள்ளது. கடந்த வாரம் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள மருந்துக்கடைக்கு இரண்டு பேர் சில்லறை நாணயங்கள் அடங்கிய மூட்டை எடுத்து வந்தனர். ரிசர்வ் வங்கியில் இருந்து வாங்கிய நாணயங்கள் இவை. எங்களுக்கு தற்போது தேவையில்லாததால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.  

               மருந்து கடைக்காரரும் புதிய நாணயம் தானே என ஆசைப் பட்டார். அந்த பையில் ஒரு ரூபாய் நாணயம் 10,000 என எழுதப்பட்டிருந்தது. இதை ரிசர்வ் வங்கி தான் எழுதியுள்ளது என நம்பி கடைக்காரர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லறையை வாங்கியுள்ளார். அவர்கள் சென்ற பின் கோனிப் பையைப் பிரித்து நாணயத்தை எண்ணிப்பார்த்த போது தான் குட்டு வெளியானது. அந்த கோனிப்பையில் வெறும் 3,000 ரூபாய் மட்டுமே இருந்தது  கண்டு கடைக்காரர் திடுக்கிட்டார். அதன்பின் பையை சோதனை செய்ததில்  ஐந்து ரூபாய் நாணயம் 2,500 எண்ணிக்கைக்குப் பதிலாக ஒரு ரூபாய் நாணயம் நிரப்பப்பட்டிருந்தது. 

                     ரிசர்வ் வங்கியில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள் உட்புறமாக திருப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் இன்னும் சில கடைகளில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இப்படியும் சிலர் மோசடியில் இறங்கியுள்ளனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior