உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 30, 2010

என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம் முற்றுகை

நெய்வேலி:

             என்எல்சி முதல் அனல் மின் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 510 ஒப்பந்தத் தொழிலாளர்களை நெய்வேலி தெர்மல் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, செப்டம்பர் 19-ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                 இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் 4 முறை தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் முகமாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.அதன்படி ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை 2-ம் சுரங்கம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது.

                  இதையடுத்து புதன்கிழமை முதல் அனல்மின் நிலையம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு, ஏஐடியுசி தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநிலத் தலைவர் சுப்ராயன், துணைத் தலைவர் வகிதாநிஜாம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 510 பேரை நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு கைது செய்து விடுவித்தார். போராட்டத்தின் தொடர்ச்சியாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ல் முதல் அனல்மின் நிலையம் முன், அரை நிர்வாணத்துடன் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தப்படும் என ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior