கடலூர்:
கடலூர் மாவட்ட கனிமங்கள் துறை உதவி இயக்குநர் மீது, லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
கடலூரில் மாவட்ட கனிமங்கள் துறை உதவி இயக்குநராக இருப்பவர் சிவகுமார். அவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பிரிவினருக்குப் பல புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து கடலூர் சேகர் நகரில் உள்ள அவரது வீட்டை துணைக் கண்காணிப்பாளர் மனேகரன் தலைமையிலான கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனர்.
இதில் அங்கு இருந்து 1.22 லட்சம் பணம் மற்றும் ஆவணங்களை பலவும் கைப்பற்றப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புப் போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். மேலும் அவரது மனைவி பெயரில் புதுவையில் ஆந்திர வங்கியில் உள்ள லாக்கருக்கு லஞ்ச ஒழிப்புப் போலீசார் புதன்கிழமை சீல் வைத்தனர். லஞ்சம் வாங்கி அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக