சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது கிளை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. பல ஆண்டுகளாக புறம்போக்கு பகுதியில் சாலை ஓரங்களில் குடியிருப்போருக்கு இலவச குடி மனைப் பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை இல்லாத குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
ஒரத்தூர் மருத்துவமனையில், மருத்துவர், இரவு நேரத்தில் தங்கி பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை தினமும் வழங்க வேண்டும். ஒரத்தூரில் சமுதாய நலக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக் குழுத் தலைவர் கே.அன்பழகன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ரகுபதி, துணைச் செயலர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் டி.மணிவாசகம், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், வட்டச் செயலர் எஸ்.காசிலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக