சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த கிள்ளை முடசல் ஓடைப் பகுதியில் உலக வங்கி நிதியுதவியுடன் 10 கோடி செலவில் முகத்துவாரம் அமைக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஜெகநாதன் தெரிவித்தார்.
முடசல் ஓடைப் பகுதியில் தூர்ந்துபோன முகத்துவாரத்தை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் இதைத் தெரிவித்தார்.
தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஜெகநாதன் மேலும் கூறியது:
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கிள்ளை பகுதியில் உலகவங்கி நிதியுதவியுடன் 10 கோடி செலவில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும் நிலையில் உள்ளது. அதுவரை தாற்காலிகமாக 30 லட்சம் செலவில் அன்னங்கோவில் முகத்துவாரத்தை 270 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் ஆழத்திலும், சின்னவாய்க்காலில் 180 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்திலும், பில்லுமேட்டில் 220 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்திலும் வெட்டி ஆழப்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக