சிதம்பரத்தை அடுத்த கிள்ளை அருகே வியாழக்கிழமை காலை ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து நிறுத்தப்பட்ட வாராணசி எக்ஸ்பிரஸ் ரயில். (உள்படம்) த
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் வியாழக்கிழமை அதிகாலை பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கிள்ளை- பரங்கிப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே, கிள்ளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை நவாப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி என்பவர் வியாழக்கிழமை அதிகாலை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் உடனே கிள்ளை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிதம்பரம் ரயில்வே பொறியாளர் ஜெயராமராம் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு அவ்வழியே வியாழக்கிழமை காலை வந்த ராமேஸ்வரம்- வாராணசி எக்ஸ்பிரஸ் ரயிலை கிள்ளை ரயில் நிலையத்திலும், விழுப்புரம்-மயிலாடுதுறை ரயிலை புதுச்சத்திரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைத்தார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு ரயில்வே தலைமை கீமேன் பன்னீர்செல்வம் சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தண்டவாளத்தில் விரிசல் விட்ட பகுதியில் வளையம் வைத்து தாற்காலிகமாக சரி செய்தார். அதன் பின்னர் அவ்வழியே 10 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் தண்டவாளத்தில் உள்ள விரிசலை முழுமையாக சரி செய்யும் பணி தொடங்கியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக