கடலூர்:
கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப் பட்ட சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடி ரூபாயில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை. நகரம் முழுவதும் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டி சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்து வரும் இப்பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்ட சாலைகளும் இன் னும் புதியதாக சார்சாலை போடாமல் இருந்து வருகிறது. நகராட்சியில் போதிய அளவு நிதி இல்லாததால் சாலை பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் நகராட்சிகளில் சாலை சீரமைப்பிற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டார். இந்த நிதியைப்பெற கடந்த மாதம் கடலூர் நகராட்சியில் அவசர கூட்டம் நடத்தி புதிய பணிகள் நிறைவேற்றிட 15 கோடி ரூபாய் தேவை என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன்பேரில் முதல்வர் கடலூர் நகரத்தில் சாலை பணிகள் மேற்கொள்ள 11 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான டெண்டர் விடும் பணி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக