உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 07, 2010

பி.இ. தமிழ்வழி மாணவர்கள் முதல்பருவத் தேர்வுகளை தமிழ்-ஆங்கிலம் கலந்து எழுதலாம: துணை வேந்தர் மன்னர் ஜவஹர்


தமிழ் வழி பொறியியல் படிப்புகளுக்கான முதல் பருவ பாடப் புத்தகங்களை புதன்கிழமை வெளியிட்டார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர்.
   
                   பி.இ. தமிழ் வழி மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை தமிழ்-ஆங்கிலம் கலந்து எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.  தமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தமிழ் வழி பொறியியல் படிப்புகளுக்கான பாட புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
  
புத்தகங்களை வெளியிட்ட துணை வேந்தர் மன்னர் ஜவஹர் பேசியது: 

                    பி.இ. இயந்திரவியல் மற்றும் கட்டடவியல் தமிழ் வழி பிரிவுகளுக்கான முதல் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் அனைத்தும் முழுமை பெற்றுள்ளன. இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் ஒரு மாத காலத்தில் தயாராகிவிடும்.  இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டுக்கான புத்தகங்கள் 2011 ஜூன் மாதத்துக்குள் தயாரிக்கப்பட்டுவிடும்.  தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலப் புலமையை பெறுவதற்காக 6 பருவங்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு 2 பருவங்களுக்கு மட்டுமே ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  

                 தமிழ், ஆங்கிலம் கலந்து போதிக்க ஏற்பாடு : தமிழ் வழி மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம் மொழிகளைக் கலந்து பாடங்களை நடத்துமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  தமிழ் வழி மாணவர்கள் முதல் பருவத் தேர்வை தமிழ், ஆங்கிலம் கலந்து எழுதலாம். இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் பிற தேர்வுகளை எப்படி எழுவது என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார். 

                     தமிழில் பாடங்களை நடத்துவதால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். ஆர்வமும் மிகுந்து காணப்படுகிறது. வகுப்புத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் 90 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் தெரிவித்தனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior