உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 07, 2010

வயலில் தண்ணீர் பாய்ந்ததை அறியும் "அலாரம்' : அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை மாணவர் கண்டுபிடிப்பு

சிதம்பரம் : 

                    வயலில் போதுமான அளவு தண்ணீர் பாய்ந்ததை அறியும் அலாரத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண்மை மாணவர் கண்டுபிடித் துள்ளார்.

                     விவசாயிகள் தங்கள் நிலங்களில் தண்ணீர் பாய்ச்சும் போது இரவு நேரங்களில் கண் விழிக்க வேண்டும். அப்படியே கண் விழித்தாலும் போதுமான அளவு தண்ணீர் பாய்ந்து விட்டதா என துல்லியமாக அறிந்து கொள்ள முடியாது. அதிகமாக தண்ணீர் பாய்ந்தாலும் மின்சாரம் அதிக அளவில் செலவாகும். இதற்கு தீர்வு காணும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவர் ராஜேஷ்குமார், வயலில் தண்ணீர் பாய்ந்து விட்டதை அறிந்து கொள்ள "அலாரம்' கண்டுபிடித்துள்ளார்.

                    இரண்டு அங்குலத்தில் மூன்று அடி நீள பிளாஸ்டிக் பைப்பில் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள் ளது. கருவியில் மின் ஒயர் மூலம் இணைத்து தனியாக நமக்குத் தேவையான இடத்தில் "அலாரம்' பொருத்திக் கொள்ளலாம். வயலில் தண்ணீர் பாய வேண்டிய அளவை அக்கருவியில் பதிவு செய்து விட்டால் பதிவு செய்யப்பட்ட தண்ணீர் பாய்ந்தவுடன் "அலாரம்' ஒலிக்கும். அதன் பிறகு மோட் டாரை ஆப் செய்து கொள்ளலாம். எளிய முறையில் யாரும் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக் கருவியை 200 ரூபாய் செலவிலேயே செய்து விட முடியும் என்கிறார் மாணவர் ராஜேஷ்குமார். சிதம்பரம் அடுத்த வலசக்காடு கிராமத்தில் பயிற்சி பெற்று வரும் வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள் விவசாயிகளுக்கு "அலா ம்' குறித்து விளக்கம் அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior