உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 07, 2010

நாட்டின் வளத்தை அழிப்பதில் ஊழலுக்கு பெரும் பங்கு : தேசிய ஆசிரியர் கல்விக்குழுத் தலைவர் வேதனை

சிதம்பரம் : 

               "தரமான கல்வியின் மூலம் தான் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்' என டில்லி தேசிய ஆசிரியர் கல்விக்குழு தலைவர் முகமது அக்தர் சித்திக் பேசினார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் டில்லி தேசிய ஆசிரியர் கல்விக்குழு தலைவர் முகமது அக்தர் சித்திக் பேசியது: 

                 அண்ணாமலை செட்டியாருக்கு 80 ஆண்டுகளுக்கு முன் இருந்த தொலைநோக்கு முயற்சி இப்பகுதி கல்வி தரத்தை மாற்றியதோடு, உயர் கல்வி வாய்ப் பினை வழங்கியுள்ளது. இந்த உலகம் போட்டி, பொறாமை, சவால்கள் நிறைந்தது. சவால் களை எதிர்கொள்ளவும், வாய்ப் புகளை பயன்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து போராட நீங்கள் இங்கே பெற்ற அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் சவால்களை கண்டு ஒதுங்க வேண்டாம். சூழ்நிலை புரிந்து செயல்பட வேண்டும்.

                       நாட்டின் வளர்ச்சிக்கு அடிப் படை கல்வி அவசியம். தரமான கல்வியின் மூலம் தான் பொரு ளாதார வளர்ச்சியை காண முடியும். 2009ம் ஆண்டில் தொடக்கக் கல்வி அடிப்படை உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. வளர் பருவத்தினர் அனைவருக் கும் இடை நிலைக் கல்வி அளிக்க தேசிய இடைநிலை கல்வித் திட்டம் செயலாற்றி வருகிறது. நமது நாட்டில் 12 சதவீதத்தினரே உயர் கல்வி பெற்றுள்ளனர். 2020ம் ஆண்டு வாக்கில் 500 மில்லியன் இளைஞர்களுக்கு தொழிற்கல்வி அளிக்கப்படும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

                    நாட்டில் 30 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை தேசிய வளர்ச்சியை பெரிதும் பாதிக் கும். வளரும் நாடுகளையும் சேர்த்து எல்லா நாடுகளிலும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் என்ற நம்பிக் கையில் பொருளாதார உலகமயமாக்கல் திட்டம் தொடங்கப்பட் டுள்ளது. இந்தத் திட்டம் மக்களின் நிலையை மேம்படுத்தும். கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டம் சமுதாயத்தின் சில பகுதியினருக்கு மட்டுமே கூடுதலான பயன்களை அளித்துள்ளது. நலிந்த மக்களையும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களையும் தவிர்த்துள்ளன.

                     வெளிநாட்டு பொருளாதார நிறுவனங்கள் தங்களது அளவு கடந்த செல்வாக்கை பயன்படுத்தி தங்களின் மிகுந்த லாப கொள்கையை கொண்டு செயல் படுவது நம் அரசாங்க நலத்திட் டங்களுக்கு சவாலாக உள்ளது. நமது மக்கள் தொகை நூறு கோடியை தாண்டியதால் திட்டமிடுபவர்களுக்கு சவாலான விஷயமாக உள்ளது. இலக்கை அடைய தீவிர வேலையில் ஈடுபடுபவர்கள் பெரும் சோதனைகளை சந்திக்க நேரிடும். அப்போது நீங்கள் திடமான பொறுமை மற்றும் விடா முயற்சியுடன் எதிர் கொள்ள வேண்டும். மக்களாட்சி கோட் பாட்டை பலப்படுத்துவது நமது கடமையாகும்.

                       பொருளாதார உலகமாக்குத் தல் கலாசார உலக மயமாக்கலுக்கு வழிவகுத்தது. இதனால் பல்வேறு தரப்பட்ட கலாசார பண்பாட்டு சூழ்நிலையில் உள்ள மக்கள் ஒருவரோடு, ஒருவர் பழகிக் கொள்ள ஏதுவாக உள்ளது. நம் பண்பாடு மற்றும் கலாசாரத்தை மதித்து அமைதியுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது கலாசார மற்றும் மத வேறுபாடுகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு சமுதாய ஒற்றுமை மற்றும் நாட்டு அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும்.

                   பொறுப்புள்ள குடிமக்களாகிய நீங்கள் நம் நாட்டில் ஊழல் அரக்கனை ஒழிப்பதில் கவனமாய் இருங்கள். நாட்டின் வளத்தை அழிப்பதில் ஊழல் பெரும்பங்களிப்பதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கிறது. கல்வித் துறையில் ஊழல் மலிந்து வருவது கல்வி நிலையங்களில் சீர்கேடுகள் நடைபெற ஏதுவாகிறது. கல்வித் துறையை சீர்தூக்க கடமையுணர்வு, உண்மை, ஒற்றுமை, நீதி, நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

                       நாட்டின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது. இளைஞர்களை நல்வழிப்படுத்தி நாட்டை சிறப்பு மிக்க நாடாக மாற்ற வேண்டும். உங்களுடைய திறமை, அறிவு, சமூக பற்று மற்றும் உங்களுக்குள் வளர்ந்து வரும் துறைசார் அறிவுத்திறனால் நாட்டை சீர்மிகு நாடாக மாற்றுங்கள். சமுதாயத்தில் நிகழும் அனைத்து சீர்கேடுகளையும் களைந்து நம் சந்ததியினக்கு நாட்டை வளமுடன் கொடுக்கும் கடமை நமக்கு உள்ளது. அதற்கு தரமான கல்வி ஒன்றுதான் சிறந்த வழி என்பதை உணர வேண்டும். இவ்வாறு முகமது அக்தர் சித்திக் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior