சிதம்பரம் :
தமிழகத்தில் ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் கடலூர், திருவாரூர் மாவட்ட கிராமங்களில் ராஜிவ் காந்தி ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டத்தில் பல் வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகார பரவலாக்கத்துறை அமைச்சக செயலர் ஆச்சாரியா தெரிவித்தார்.
ஆதிதிராவிட மக்கள் 50 சதவிகிதத்திற்கும் மேலாக வசிக்கும் கிராமங்களில் கல்வி, குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட பல் வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக, பாரத பிரதமரின் ஒருங்கிணைந்த முன்னேற்றத் திட்டம் (ராஜிவ்காந்தி ஆதர்ஸ் கிராம யோஜனா) செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் 12வது நிதிக்குழு திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் 10 லட்சம் ரூபாய் மத்திய அரசின் நிதி மற்றும் மாநில அரசு நிதியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 68 கிராமங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார பரவலாக்கத்துறை அமைச்சக செயலர் ஆச்சாரியா, மத்திய அரசின் இணை செயலர் சஞ்சீவ் குமார், தமிழக அரசின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத் துறை முதன்மை செயலர் விஸ்வநாத் சகாங்கர், ஆணையர் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். கீரப்பாளையம் ஒன்றியம் பரதூர் கிராமத்திற்கு சென்ற குழுவினர் பொதுமக்களின் வாழ்க்கை நிலை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந் தைகளுடன் உரையாடிவிட்டு, சத்துணவை ஆய்வு செய்தனர்.
பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். கூட்டத்தில் கலெக் டர்கள் சீத்தாராமன், சந்திரசேகரன், எம்.எல்.ஏ., ரவிக் குமார், ஒன்றிய சேர்மன் கள் செந்தில்குமார், மாமல் லன், ஜெயச்சந்திரன் மற் றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில் ஆச்சாரியா கூறுகையில்,
இந்த திட்டம் செயல்படுத்த இந்தியாவில் 44,000 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள் ளது. முதற்கட்டமாக தமிழ் நாடு, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 1,000 கிராமங்களில் செயல் படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 63ம், திருவாரூர் மாவட்டத்தில் 225 கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப் படும்.மத்திய அரசு நிதி 10 லட்சம், மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமும் ஒரு கிராமத்திற்கு ஒரு கோடி வரையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக