உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 24, 2010

சிதம்பரம் நகரில் குப்பைத் தொட்டி வைப்பதிலும் அரசியல்!


சிதம்பரம் மேலவீதியில் கடைமுன்பு குப்பை தொட்டி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆதரவு தெரிவித்து கூடிய திமுகவ
 
சிதம்பரம்:
 
            சிதம்பரம் நகரில் மேலரதவீதியில் கடை ஒன்றின் முன்பு நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பைத் தொட்டியை அங்குதான் வைக்க வேண்டும் என திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பில் வெள்ளிக்கிழமை புதிய குப்பைத்தொட்டி ஒன்று மேலரதவீதியில் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கடை ஒன்றின் முன்பு வைப்பதற்கு வந்தனர். குப்பைத் தொட்டியை அங்கு வைக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூசா, நகரச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
                        தகவல் அறிந்த அந்த வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகன் மற்றும் திமுக நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், வெங்கடேசன், வி.என்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராஜராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குப்பைத்தொட்டி சாலையோரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் தொட்டியை வைக்க வேண்டும் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் மற்றும் போலீஸôர் அங்கு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குப்பைத் தொட்டியை அதே இடத்தில் வைத்துவிட்டு வந்தனர்.
 
                   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவராக உள்ள சிதம்பரம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிக்கு அந்த கட்சியே எதிர்ப்பு தெரிவிப்பது வேதனையளிக்கிறது என திமுக நகரமன்ற உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior