உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

பரங்கிப்பேட்டை பகுதிகளில் மழையின்றி கருகும் மானாவாரி நெற்பயிர்: விவசாயிகள் கவலை

பரங்கிப்பேட்டை : 

                    பரங்கிப்பேட்டை பகுதிகளில் பருவ மழையை நம்பி மானாவாரியாக பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

                   பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள புதுச்சத்திரம், வில்லியநல்லூர், அரியகோஷ்டி, அகரம், சின்னகுமட்டி, பெரியகுமட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மணல் பாங்கான இடமாக உள்ளது. இங்குள்ள புஞ்சை நிலங்களில் பருவ மழையை நம்பி அதற்கு தகுந்தாற்போல் உரிய காலத்தில் நெல் மானாவாரி பயிர் செய்வது வழக்கம். பருவ மழை பொய்க்கும் பட்சத்தில் வயலில் ஒரு ஓரத்தில் குளம் வெட்டி அதில் இருந்து தண்ணீரை குடங்கள் மூலமாக பிடித்து தெளித் தும், இன்ஜின் வைத்து குழாய் மூலமாகவும் பாய்ச்சி வந்தனர். இதனால் நஞ்சை நிலங்களைவிட புஞ்சை நிலங்களில் பயிர் செய்த விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.

                         தற்போது அத்தியாநல்லூர், கொத்தட்டை, வேளங்கிப்பட்டு, புதுச்சத்திரம் உட்பட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் 700 ஏக்கர் நெல் பயிர் விவசாயம் செய்துள்ளனர். ஓரளவிற்கு வளர்ந்து விட்ட நிலையில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்யும் பருவ மழை இதுவரை பெய்யாமல் உள்ளதாலும் சுட்டெரிக்கும் வெயிலாலும் நெற்ப்பயிர்கள் கருகி வருகிறது. சுனாமிக்கு பிறகு பரங்கிப் பேட்டை பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துள்ளதால் புஞ்சை நிலங்களில் உள்ள குளத்தில் கூட போதுமான அளவில் தண்ணீர் சுரப்பு இல்லாமல் உள்ளது.  இதனால் கருகும் மானாவாரி நெல் பயிர்களை ஓரளவு காப்பாற்ற போர்வெல் போட்டு இன்ஜின் மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர். இருந்தும் அந்த தண்ணீர் மணல் பாங்கான அந்த இடத் திற்கு போதாமல் பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

அரியகோஷ்டி விவசாயி செல்வமணி கூறுகையில்,

                       "பருவ நிலைக்கேற்ப மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்து வந்தோம். தற்போது ஐப்பசி மாதத்தில் கூட இன்னும் போதுமான மழை பெய்யவில்லை. பெரும்பாலான கிராமங்களில் உள்ள கூலித் தொழிலா ளர்கள் கட்டட வேலைக்கு செல்வதால் ஆள் பற்றாக்குறை காரணமாக நெற்பயிருக்கு தண்ணீர் இறைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் 100 ஏக்கர் வரை நெற்பயிர்கள் கருகி விட்டன' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior