உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்து மூவர் படுகாயம்

கடலூர் :

                 கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்ததில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். கடலூர், முதுநகர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அரவிந்தோ பார்மா லிமிடெட் கம்பெனியில் மாத்திரைகள் தயாரிப்பதற்கான முக்கிய ரசாயனப் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இக்கம்பெனியில் கடலூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.

                     நேற்றிரவு 7 மணிக்கு கம்பெனியில் உள்ள மூலப் பொருட்களான ரசாயன பவுடரை உலர வைக்கும் கொதிகலன் அதிக வெப்பம் தாங்காமல் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த முதுநகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மின் இணைப்புகளை துண்டித்து, உலர் கொதிகலனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
 
              இவ்விபத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ்மேத்தா, பங்கஜ் கிஷோர், திவாரி மேத்தா ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன், மூவரும் கடலூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலூர் முதுநகர் போலீசார், மாசுகாட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior