கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகள் சீர்குலைந்து, கடற்கரைக்கு வருவோரை அறுவெறுப்புக்கும், பாதுகாப்பற்ற நிலைக்கும் உள்ளாக்கி வருகின்றன. 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் நகராட்சி பொது நிதியில் இருந்து தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட பல இடங்களில் பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டன. பராமரிப்பு இன்றியும் அவற்றைப் பயன்படுத்துவோரின் அலட்சியம் காரணமாகவும் அவை அனைத்தும் சீர்குலைந்து கிடக்கின்றன.
இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த கழிவறைகள் மாறி வருகின்றன. இவை கொள்ளையர்கள் பதுங்கி இருந்து, பீச்சுக்கு வருவோரிடம் வழிப்பறி செய்ய வசதியான இடமாக மாறி வருகின்றன. சிலவர் பீச்சில் மின் விளக்குகள் ஒழுங்காக எரியாத நிலையில், கடற்கரைக்குக் காற்று வாங்க வருவோரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக உள்ளது.
பீச்சுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு நகராட்சியால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியை இந்த பீச்சின் பராமரிப்புக்குச் செலவிட்டால்கூட, மக்களுக்கு ஓரளவேனும் பயனுள்ளதாக அமையும் என்கிறார்கள் கடற்கரைக்கு வருவோர். இந்தப் பொதுக் கழிப்பறைகளை, நகராட்சி பழுதுபார்த்து முறையாகப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது இடித்து தள்ளிவிட வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக