சிதம்பரம்:
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலாவாக தமிழகம் வந்துள்ளனர்.சுற்றுலாக் குழுவினர் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் முறை குறித்து தெரிந்து கொண்டனர்.
சிங்கப்பூர் நாட்டின் பெருமையை பற்றியும், அதன் அழகையும், தூய்மையையும் பற்றி நாம் பெருமையாக பேசுவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களுடன் தமிழகத்துக்கு கல்விச்சுற்றுலா வந்துள்ளனர். சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூச்சூன் பள்ளி மாணவ, மாணவியர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் பெருமாள், டேவிட், சகாயராஜ் ஆகியோர் இந்தியாவுக்கு ஒருவார கல்விச் சுற்றுலாவாக வந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்துக்கு வந்த அம்மாணவர்கள் சிதம்பரத்தை அடுத்த தண்டேஸ்வரநல்லூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனர். அவர்களை பள்ளித் தாளாளர் அருளானந்தம், தலைமைஆசிரியை ஜோஸ்பின்மேரி ஆகியோர் வரவேற்றனர். மாணவர்களுக்கு தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.மேலும் தமிழகத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் உள்ளிட்ட கலாசாரங்கள் குறித்து சிங்கப்பூர் மாணவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் அச்சுற்றுலா குழுவினர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக