கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் படக்காட்சி காண்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து கொள் ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலமாக விளம்பரம் செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலமாக படக்காட்சி போடவுள்ள கிராமங்கள் பற்றிய விவரம் வருமாறு:
கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கரைமேடு கிராமத்திலும், 7.30 முதல் 8.30 மணி வரை உள்ளேரிப்பட்டு கிராமத்திலும் முறையே 9ம் தேதி கடலூர் துறைமுதுநகர், சேடப்பாளையமும், 10ம் தேதி தோட்டப் பட்டு, மருதாட்டிலும், 11ம் தேதி தூக்கணாம்பாக்கம், பள்ளிப்பட்டிலும், 12ம் தேதி கீழ்க்குமாரமங்கலம், காரணப்பட்டிலும், 13ம் தேதி காராமணிக்குப்பம், வரக்கால்பட்டிலும் படக்காட்சி நடைபெறும்.
அண்ணா கிராமம் ஒன்றியத்தில் 16ம் தேதி பட்டாம்பாக்கம், நெல்லிக் குப்பத்திலும், 17ம் தேதி பி.என்.பாளையத்திலும், 18ம் தேதி கோழிப்பாக்கம், பெரிய பகண்டையிலும், 19ம் தேதி கீழ்கவரப்பட்டு, மேல்கவரப்பட்டிலும், 22ம் தேதி தட்டாம்பாளையம், கண்டரக்கோட் டையிலும், 23ம் தேதி கொங்கராயனூர், மாளிகைமேட்டிலும் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக