உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 09, 2010

கடலூர் மாவட்டத்தில் 100 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு


ஞாயிற்றுக்கிழமை அடித்த ஜல் புயலில், கடலூர் அருகே எஸ்.புதூரில் ஒடிந்து விழுந்து கிடக்கும் வாழை மரங்கள்.
 
கடலூர்:

             "ஜல்' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததால், 100 கிராமங்களில் திங்கள்கிழமை 2-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. 500 ஏக்கரில் வாழை, கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.

                 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்றுடன் மழை பெய்ததால், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மின்கம்பங்கள் சாய்ந்தன புயல் தாக்கியதும் முதல் பாதிப்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுதான். கடலூர், கேப்பர் மலை உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததில் திங்கள்கிழமை 2-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் உயர் அழுத்த மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்தன. 

                   பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததால், மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகரங்களில் காலை முதல் இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. சில இடங்களில் இரவு 8 மணிக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

விவசாயப் பயிர்கள் பாதிப்பு:

                        புயல் காரணமாக கேப்பர் மலைப் கிராமங்கள் மற்றும் நெல்லிக்குப்பம் பண்ருட்டி பகுதிகளில் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்தன. கரும்பு, ரோஜா, மல்லிகை பூந்தோட்டங்கள் பலவும் சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். தென்னை, மா, பலா, தேக்கு உள்பட 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டன. கரும்புப் பயிர்களும் சாய்ந்தன.

இது குறித்து கடலூரை அடுத்த ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் விவசாயியுமான ஞானசேகரன் கூறுகையில், 

                    "100 ஏக்கரில் ரோஜா மற்றும் மல்லிகை தோட்டங்கள் சேதம் அடைந்து உள்ளன. இனி இவற்றில் புதிதாகத் தளிர் வந்த பிறகுதான், பூக்களைக் காண முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது' என்றார். 

பெண்ணை ஆற்றில் வெள்ளம்

                         நட்டு 10 நாள்கள் ஆன சம்பா நெல் வயல்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior