நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் ஜீவா நகர் பஸ் நிறுத்தம் தனியார் மரம் வியாபாரியின் குடோனாக மாறியதால் மக்கள் சிரமப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி ஜீவா நகர் அருகே மின்வாரிய அலுவலகம் இரண்டு முக்கிய தனியார் மருத்துவமனைகள், சர்க்கரை ஆலை அலுவலகம், கல்வியியல் கல்லூரியும் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பஸ் நிறுத்தம் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் தனர். பஸ் நிறுத்தம் கட்டினால் பஸ் கள் நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் சடகோபன் நினைவாக டாக்டர் கிருஷ் ணகோபால் தனது செலவில் நமக்கு நாமே திட்டத்தில் சாலையின் இருபுறமும் இரண்டு பயணிகள் நிழற்குடைகளை கட்டினார். 2001ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் சந்தீப் சக்சேனா திறந்து வைத்தார்.விழாவில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இனி இங்கு பஸ்கள் நிற்கும் என கூறினர். ஓரிரு மாதங்கள் பஸ்கள் நின்றன. அதன்பிறகு பஸ்கள் நிற்பதில்லை. பஸ் நிறுத்தத்தை மர வியாபாரி ஒருவர் குடோனாக பயன் படுத்த துவங்கினார்.
மற்றொரு பஸ் நிறுத் தம் பகலில் மீன் கடையாகவும் இரவில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறியது.அப்பகுதி மக்கள் கலெக்டர், முதல்வர், கவர்னர் என பலருக்கு தொடர்ந்து மக்கள் மனு அனுப்பி வந்தும் பஸ்களை நிறுத்த நடவடிக்கை இல்லை.பயணிகள் நிழற்குடை கட்டினால் பஸ்கள் நிறுத் தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கூறியது போல் பஸ்கள் நிற்பதில்லை. மனுக்கள் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் பஸ்கள் நிறுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக