நெல்லிக்குப்பம் :
நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பிற்கு ஆசிரியர் இல்லாததால் மாணவிகள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,000 மாணவிகள் படிக்கின்றனர். நெல்லிக்குப்பம் வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளி மாணவிகள் தேர்ச்சி சதவீதத்திலும், அதிக மதிப்பெண் எடுப்பதிலும் தனியார் பள்ளிகளை விட சிறந்து விளங்குகின்றனர். சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட்டு வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் 10ம் வகுப்பு நான்கு பிரிவுகள் உள்ளன. அறிவியல் பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களில் ஒருவரை தற்காலிகமாக பள்ளி துணை ஆய்வாளர் பணிக்கு மாற்றினர். இவர் மாவட்ட கல்லி அலுவலர் அலுவலக பணியை பார்ப்பதால் பள்ளிக்கு வரமுடியவில்லை.
இதனால் 10ம் வகுப்பில் இரண்டு பிரிவுகளில் அறிவியல் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை. ஒரே பள்ளியில் படிக்கும் பாதி மாணவிகளுக்கு மட்டும் அறிவியல் ஆசிரியர்கள் இல்லாததால் அந்த மாணவிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. தேர்ச்சி சதவீதம் குறைந்தால் ஆசிரியர்களை குறைகூறும் கல்வித்துறை அதிகாரிகள் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க வேண்டும். மாணவிகளின் நலன்கருதி அறிவியல் ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக