உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 11, 2010

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மழை


பலத்த கொந்தளிப்புடன் அலைகள் அதிக உயரம் எழுந்து ஆர்ப்பரிக்கும் கடலூர் தேவனாம்பட்டினம் கடல்.
 
கடலூர்:
 
               கடலூரில் வெள்ளிக்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் 15 நாள்களுக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. கடந்த திங்கள்கிழமை வரை மழை நீடித்தது. 
 
                செவ்வாய்க்கிழமை முதல் மழை ஓய்ந்து சூரியன் முகத்தை பார்க்க முடிந்தது.இதனால் மூழ்கிக் கிடந்த நெல் பயிர்கள் வெளியே தலைகாட்டத் தொடங்கின. வயல்களில் தேங்கி இருக்கும் நீரை வடிய வைக்கும் முயற்சியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
              கடந்த 3 நாள்களாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் வேளையில், வெள்ளிக்கிழமை, வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மீண்டும் வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது. காலையில் லேசான மழை பெய்தது. மாலை வரையிலும் வானம் மேகமூட்டத்துடன்  காணப்பட்டது. எந்த நேரத்திலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு தெரிந்தது.
 
                 இத்தகைய வானிலை காரணமாக, வெள்ளிக்கிழமை வங்கக் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. கடல் அலைகள் 12 அடி உயரத்துக்கு மேல் எழும்பி ஆர்ப்பரித்தன. எனினும் படகுகள் அனைத்தும் மீன் பிடிக்கச் சென்று இருந்தன ."தொடர்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்படுவது, ஈரப்பதம் நீடிப்பது பயிர்களுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை' என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior