உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 11, 2010

பரவனாற்று கரை சீரமைப்பு: என்.எல்.சி. நடவடிக்கை


என்எல்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் பரவனாற்று கரை பலப்படுத்தும் பணி.
 
நெய்வேலி:
 
             மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பரவனாற்று கரையை என்எல்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீர்செய்து, சென்னை-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.
 
              அண்மையில் பெய்த மழையால், நெய்வேலிக்கு அருகிலுள்ள பரவனாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், வடலூரை அடுத்த மருவாய் அருகே கரையை முற்றிலும் உடைத்துக் கொண்டு, சென்னை- கும்பகோணம் சாலையை அரித்துக்கொண்டு சென்றது. இதனால் இச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.அண்மையில் வடலூர் வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும், சாலை துண்டிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டுச் சென்றார். 
 
               இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சீதாராமன், என்எல்சி நிர்வாகத்தின் துணையுடன் அப்பகுதியை சீரமைக்க முயற்சி மேற்கொண்டு, என்எல்சி சுரங்கத்துறை இயக்குநர் பி.சுரேந்திரமோகனுடன் பேசினார். இதைத்தொடர்ந்து என்எல்சி 2-ம் சுரங்க அதிகாரிகள் மேற்பார்வையில், பரவனாற்று கரை பலப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடந்த இப் பணி, ஒரே நாளில் முடிக்கப்பட்டு, கரைப் பலப்படுத்தப்பட்டதுடன், சாலையில் வெள்ள அரிப்பு ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior