சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 2ம் தேதி துவங்குகிறது.
நாட்டிய கலைஞர்கள் தங்களின் நாட்டிய கலையை நடராஜருக்கு அர்ப்பணிக்கும் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதற்காக அறக்கட்டளை துவக்கி 1981ம் ஆண்டு முதல் கடந்த 29 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது.
இந்த ஆண்டு 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வெளிப்பிரகாரத்தில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலர்கள் நாகசாமி, வக்கீல் சம்பந்தம், துணைத் தலைவர் சாமிநாதன், இணைச் செயலர் சக்தி நடராஜன் குழுவினர் செய்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக