கடலூர் :
கடலூரில் வினியோகிக்கப்படும் குடிநீரை தினசரி பரிசோதிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.
கடலூரில் 23 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் சிறப்பு சாலை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேணுகோபாலபுரத்தில் நடந்த ஆய்வில் பாதாள சாக்கடைத் திட்ட ஆள் நுழைவு குழிகள் பல உடைந்தும், மண்கொட்டி மூடப்பட்டிருந்தது. அதனை சுத்தம் செய்யவும், ஆள் நுழைவு குழாய்களை சாலை மட்டத்திற்கு உயர்த்தவும் உத்தரவிட்டார்.
பின்னர் அப்பகுதி மக்களிடம் பாதாள சாக்கடைத் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க குழாய் புதைக்கப்பட்டுள்ளதா? இத்திட்டத்திற்கு பணம் செலுத்தி விட்டீர்களா? குடிநீர் இணைப்பு உள்ளதா? தண்ணீர் தினசரி வருகிறதா என விசாரணை செய்தார். அதற்கு அப்பகுதி மக்கள் தண்ணீர் கலங்கலாக இருப்பதால் குடிக்க பயன்படுத்த முடியவில்லை என்றனர். உடன் நகராட்சி அதிகாரிகள் திருவந்திபுரம் மலையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுவதாகவும், இரும்பு தாது சற்று அதிகமாக உள்ளதால் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினர். உடன் நிர்வாக ஆணையர் தண்ணீரை தினசரி மாதிரி எடுத்து ஆய்வு செய்யவும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக